மின்கம்பிகள் திருடிய 4 பேர் பிடிபட்டனர்
பாப்பாக்குடியில் மின்கம்பிகள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கூடல்:
பாப்பாக்குடி மின்வாரிய அலுவலகத்தில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்து உதவி மின்பொறியாளர் பரிமளாதேவி நேற்று பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த திருட்டு தொடர்பாக பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர், குமாரசாமிபுரம் மாரியப்பன், பனையங்குறிச்சியைச் சேர்ந்த முருகன், பழைய இரும்பு வியாபாரம் செய்யும் கணேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அலுமினிய மின்கம்பிகள், அவற்றை கடத்தி செல்ல பயன்டுத்திய ஆட்ேடா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.