பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட 4 பேர் சிக்கினர்

நெல்லை அருகே பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட 4 பேர் சிக்கினர்.

Update: 2023-07-10 19:31 GMT

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த உகந்தான்பட்டியை சேர்ந்தவர் ராம அய்யப்பன் (வயது 19). இவருடன் சேர்ந்து 3 சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வசனத்துடன் இருக்கும் வீடியோ காட்சிகளை அனைவரும் பார்க்கும்படி பதிவேற்றம் செய்துள்ளார்கள். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபினா மரியம் வழக்குப்பதிவு செய்து ராம அய்யப்பன் உள்பட 4 பேரையும் நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்