புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
கடையம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள காளத்திமடம் பகுதியில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குருவன்கோட்டையில் இருந்து கடையம் பகுதிக்கு வந்த காரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தியதாக குருவன் கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் கலைச்செல்வன். லிங்கேஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.