போதை மாத்திரை, ஊசி விற்ற 4 பேர் கைது

போதை மாத்திரை, ஊசி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-19 19:59 GMT

திருச்சி வரகனேரி மீன் மார்க்கெட் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது சாதிக் ராஜா(வயது 21), திருச்சி தெற்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த பரத்குமார் (19) மற்றும் எட்டரை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) ஆகியோர் அங்கு போதை மாத்திரைகள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 165 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி செங்குளம் காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் செங்குளம் கிராம நிர்வாக அலுவலர், பாலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி, போதை மாத்திரையை நீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்தும் வகையில் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த புகழேந்தியை(22) கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்