போதைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது
சங்கரன்கோவிலில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் டவுன் போலீசார், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் தலைமையில் அண்ணா நகர், ரெயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி, அதில் கூடுதல் போதைக்காக பல்வேறு பொருட்களை கலந்து விற்பனை செய்ததாக, சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 57), சங்கரன்கோவில் கணபதிநகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கருப்பசாமிபாண்டியன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 காலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, காயிதே மில்லத் 1-ம் தெருவை சேர்ந்த அப்துல் காதர் (49), அவரது மகன் அமீர் அலி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.