தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லடை அண்ணா நகரை சேர்ந்த கணபதி (வயது 45), கானாபுதூர் சேர்ந்த துளசி (50), தெலுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் (50) ஆகியோர் அவரவர் வீடுகளிலும், சின்னரெட்டிபட்டியை சேர்ந்த மலர்கொடி (36) ஒரு பெட்டிக்கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.