குளித்தலை அருகே உள்ள கொட்டிபாறை, நடுப்பட்டி வாய்க்கால் பாலம், ஈச்சம்பட்டி பஸ் நிறுத்தம், கணக்கப்பிள்ளையூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் மதுவிற்ற பாப்பாத்தி (வயது 60), சுப்பிரமணி (45), செல்வராஜ் (42), தமிழழகன் (62) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.