ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது

புதுக்கோட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-20 18:40 GMT

வாகன சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிருந்தாவனம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த குணா (வயது 22), நவீன் என்கிற கொசு நவீன் (20), ஆனந்த் (20) ஆகியோர் வேல்கம்பு, இரும்பு வெட்டருவாள், வீச்சு அரிவாள் ஆகியவற்றை வைத்திருந்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்காட்சியகம், மகாராஜபுரம் அன்னம்மாள்புரம் பகுதிகளிலும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையில் வாளை வைத்து திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்த புதுக்கோட்டை நத்தம்பண்ணையை சேர்ந்த சன்னாசி என்கிற சன்னாசி பாண்டியனை (32) கைது செய்தனர்.

கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி 4 பேர் கைது தொடர்பாக தனிப்படையினர் மற்றும் போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்