குளத்தில் மண் அள்ளிய 4 பேர் கைது
நாங்குநேரி அருகே குளத்தில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி குளத்தில் அனுமதி இன்றி மண் எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் விரைந்து சென்று முறையான அனுமதியின்றி மண் எடுத்த 4 டிராக்டர்களை பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி (வயது 23), சீனிவாசன் (19), சுரேஷ்குமார் (26), கண்ணன் (25) ஆகியோரை கைது செய்தார்.