திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே வையகளத்தூர் கருவக்கண்மாய் பகுதியில் சவுடு மண் அள்ளுவதாக கண்டவராயன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருவக்கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சிலர் சவுடுமண் அள்ளி கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் நெற்குப்பை கீழத்தெருவை சேர்ந்த பிரபு(வயது 26), துவாரையை சேர்ந்த வள்ளியப்பன்(67), தஞ்சாவூர் மாவட்டம் நல்லி வாணியங்குடியை சேர்ந்த ரகு(31), பூலாங்குறிச்சியை சேர்ந்த வீரய்யா(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மண் அள்ள பயன்படுத்திய 3 டிராக்டர், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.