மாணவர் கொலை வழக்கில் 4 பேர் ராணிப்பேட்டை கோர்ட்டில் சரண்
மாணவர் கொலை வழக்கில் 4 பேர் ராணிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 22-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கிற அபினேஷ் (வயது 22) என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விஜய் (25), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (22) ஆகிய 4 பேர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துரைபாபு முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் 15 நாள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.