சாராயம் விற்பனை பெண் உள்பட 4 பேர் கைது

கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்பனை பெண் உள்பட 4 பேர் கைது 800 லிட்டர் ஊறல் அழிப்பு

Update: 2022-08-19 16:32 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை அடிவாரம் மல்லிகைப்பாடி வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் பதுக்கி வைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாட் மனோ மற்றும் போலீசார் மல்லிகைப்பாடி வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதி ஓடையில் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதேபோல் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரத்தினம்(வயது 32), அஞ்சலை(50) ,தேவேந்திரன்(42), மல்லிகைப்பாடி கிராமம் செல்வகுமார்(37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்