தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது

Update: 2023-06-11 18:45 GMT

பேரளம் அருகே உள்ள தேர்பாக்குடி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இந்த விழா தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் மகன் இளந்தென்றல் கலந்துகொண்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன்(வயது 29), அவரது சகோதரர்கள் விஷ்ணுப்பிரியன்(24), விமலேஸ்வரன்(22) மற்றும் ஹரிஹரன்(25) ஆகியோர் சேர்ந்து இளந்தென்றலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். இதுகுறித்து பேரளம் போலீசில் நமச்சிவாயம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், விமலேஸ்வரன், ஹரிஹரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்