சிறுமி உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருவாரூர் மாவட்டத்தில் சிறுமி உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-09-14 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் சிறுமி உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 பேருக்கு அறிகுறி தென்பட்டதால் அவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவர்கள் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

தனிவார்டு

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு தொடங்கப்பட்டு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகளை நேரில் கண்காணித்து அழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்