கார் கவிழ்ந்து பெண் நீதிபதி உள்பட 4 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து பெண் நீதிபதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-26 19:47 GMT


மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக இருப்பவர் ரோகினி (வயது 53). இவர் தனது மகள் அர்ச்சனா(23), மகன் நவீன் (19) ஆகியோருடன் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை ராஜமாணிக்கம்(43) என்பவர் ஓட்டினார். விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வரும்போது கார் திடீரென கவிழ்ந்தது. இதில் நீதிபதி ரோகினி, அர்ச்சனா, நவீன் மற்றும் கார் டிரைவர் ராஜமாணிக்கம் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்