53 பேரிடம் ரூ.2¾ கோடி மோசடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

முதலீடு செய்தால் லாபத்தில் கூடுதல் பங்கு தருவதாக கூறி 53 பேரிடம் ரூ.2¾ கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-19 07:25 GMT

ஆவடி,

சென்னை முத்தியால்பேட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 44). இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருமுல்லைவாயல் சாந்திபுரம் 4-வது தெருவைசேர்ந்த ஜாய்ஸ் விக்டோரியா, அவருடைய கணவர் பிராங்கிளின் ஜெயச்சந்திரன் ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்தில் சர்க்கரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் கூடுதல் பங்கு தருவதாகவும் கூறினர்.

அதை நம்பி ரூ.26 லட்சம் வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததுடன், ெகாடுத்த பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் ஜாய்ஸ் விக்டோரியா (55), அவருடைய கணவர் பிராங்கிளின் ஜெயச்சந்திரன் (65), மகள் மெர்லின் கிறிஸ்டோ (28), மருமகன் ஜோ இன்பண்ட் சேவியர் (33) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜோசப் உள்பட சுமார் 53 நபர்களிடம் இதுபோல் முதலீடு செய்தால் லாபத்தில் கூடுதல் பங்கு தருவதாக கூறி ரூ.2.80 கோடி வரை மோசடி செய்தது ெதரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்