ஆடுகளை திருடிய 4 பேர் கைது
இலுப்பூரில் ஆடுகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை காணவில்லை என இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேலப்பட்டியில் ஆடுகளை திருடியதாக இலுப்பூர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த சாமியப்பன் மகன் மோகன்ராஜ் (வயது 20), மேலப்பட்டியை சேர்ந்த காளிமுத்து மகன் கார்மேகம் (25), சாலைப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் பிரேம்குமார் (21), மெய்யக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நல்லுசாமி மகன் பிரபாகரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 4 ஆடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.