மணல் கடத்திய 4 பேர் கைது
குடியாத்தம் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆற்றில் மணலை மூட்டைகளாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் செல்வதாக வந்த புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சூராளூர் கொட்டாற்று பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சிலர் மணலை மூட்டைகளாக கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 23), மணி (31), கிரி (23), சரத்குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய நான்கு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.