ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது
ஆன்லைன் லாட்டரி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன், திருக்கோகர்ணம், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட குணசேகரன் (வயது 55), உலகநாதன் (37), மோகன் (67), கார்த்திகேயன் (50) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3,894 மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.