லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-29 18:37 GMT

ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த நாடியான் (வயது 47), ஆலங்குடி பாகவதர் காலனியை சேர்ந்த மன்சூர் அலிகான் (29), ஆலங்குடி செட்டிகுளம் வடகரையை சேர்ந்த முருகன் (42), புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த அஜித்குமார் (23) ஆகிய 4 பேர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கார், செல்போன்கள், மோட்டார் சைக்கிள், ரூ.17,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்