வடமாநில தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

வடமாநில தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

Update: 2023-02-20 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பீகாரை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் பீகாரை சேர்ந்த சுரஷ் பியாஸ் குமார் (25) மற்றும் அவரது 2 நண்பர்கள் கடைவீதிக்கு சென்றனர். அப்போது திருப்பத்தூர் காண்பா நகர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (25), தங்கப்பாண்டி (24), கார்த்திக் (28), முருகன்(23) உள்பட 5 பேர் பியாஸ்குமாருடன் தகராறு செய்தனர். மேலும் இவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு சென்று அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பியாஸ்குமார் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிலம்பரசன், தங்கப்பாண்டி, கார்த்திக், முருகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்