பள்ளி செல்லாத குழந்தைகள் 4 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கருங்குளம் யூனியனில் பள்ளி செல்லாத குழந்தைகள் 4 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-10-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலின்படி, உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் கென்னடி, போலீசார் அஜய், அரிராணி, கருங்குளம் வட்டார கல்வி அலுவலர் செல்வக்குமார், மரியஜெயசீலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் வீடு, வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 4 மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் 4 மாணவ, மாணவிகளையும் மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்