ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.

Update: 2022-09-16 20:53 GMT

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் மற்றும் அதை சுற்றி தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ரூ.300 கோடி மதிப்பில் 4 வழிச்சாலைகள் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். அதன்படி ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலை, ஓசூர்-தேன்கனிக்கோட்டை (வழி தளி), ஓசூர் உள்வட்டச்சாலை இ.எஸ்.ஐ. முதல் தேன்கனிக்கோட்டை சாலை வரை, ஓசூர் அவுசிங் போர்டு முதல் சானமாவு வரை 4 வழிச்சாலைகள் அமைகின்றன.

அதே போல ஓசூர் உள்வட்டச்சாலையில் பல்வழி தட மேம்பாலம் அமைய உள்ளது. இந்த இடங்களை நெடுஞ்சாலைத்துறை சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர்கள் திருமால்செல்வன் (தேன்கனிக்கோட்டை), செந்தில்குமரன் (ஓசூர்), உதவி பொறியாளர்கள் மன்னர்மன்னன் (ராயக்கோட்டை), வெங்கட்ராமன் (ஓசூர்), தேன்கனிக்கோட்டை இளநிலை பொறியாளர் டேவிட் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்