வெளிநாட்டில் வேலை... ஆன்லைன் மூலம் ரூ.4 ¼ லட்சம் மோசடி

திருச்சி அருகே வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.4 ¼ லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-21 16:31 GMT

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழ சாலை ராகவேந்திரா குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேந்தர் (26). இவர் வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து இணையதளம் மூலம் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கட்டுமான நிறுவனத்திலிருந்து செல்போன் மூலம் இவரை தொடர்புகொண்ட மர்ம நபர் இணையதளம் மூலம் அவருக்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். பின்னர் அவருடைய மின்னஞ்சலுக்கு பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுடைய தரப்பில் மருத்துவ பரிசோதனை, பயோ மெட்ரிக் பணிகள், பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள், உள்ளிட்டவற்றை பெற ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்தை பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை,

மேலும் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை, இது குறித்து சுரேந்தர் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்