தாறுமாறாக ஓடிய வேன் மோதி 4 பேர் காயம்
தாறுமாறாக ஓடிய வேன் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.
குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி மோகனசுந்தரி (வயது 32). இவர் குளித்தலை காவிரி நகர் பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம்போல தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிகள்கள் மற்றும் மோகனசுந்தரி வைத்துள்ள தள்ளு வண்டியில் மோதியதி உள்ளது. இந்த விபத்தில் தள்ளுவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
மேலும் மோகனசுந்தரி, குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்த (பாலாஜி 19), வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (57), கவுசல்யா (22) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அங்கிருநு்தவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் கவுசல்யா மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.