கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

ஏர்வாடி அருகே கார் கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-01-03 19:33 GMT

நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சிவா (வயது 22). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த வர்கீஸ், இலங்குளத்தை சேர்ந்த கீர்த்தி ஈஸ்வர், சாத்தான்குளத்தை சேர்ந்த பாரதி, ஏரலை சேர்ந்த முகம்மது அப்ரீத் ஆகியோருடன் வர்கீஸ் காரில் இலங்குளத்தில் இருந்து வள்ளியூருக்கு சென்று கொண்டிருந்தார்.

ஏர்வாடி அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள சிறுமளஞ்சி கோணவாய்க்கால் பாலம் அருகே சென்ற போது கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிவா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்