மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் சாவு

கீழ்வேளூர் அருகே பலத்த காற்றில் மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின்கம்பிகள்அ றிந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்தன.

Update: 2023-10-10 18:45 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சி புது தெருவை சேர்ந்தவர் ராசு (வயது 65).இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் நேற்று மேய்ச்சலுக்கு சென்று இருந்தன. மதியம் 1 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகள் ராசுவின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன.அப்போது தொழுவத்துமேடு - தத்தங்குடி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே தரைப்பாலம் பகுதியில் பலத்த காற்று காரணமாக அங்கு இருந்த மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து கீழே நின்று கொண்டிருந்த ராசுவின் 4 ஆடுகள் மீது விழுந்தது.இதில் மின்சாரம் தாக்கி 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராசு கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்