விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்அதிகாாி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது என அதிகாாி தொிவித்துள்ளாா்.;

Update: 2023-02-01 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அதன்படி இம்மாதம் விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை), கண்டமங்கலம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 14-ந் தேதியும், செஞ்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 21-ந் தேதியும், திண்டிவனம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் 28-ந் தேதியும் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேலும் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும் அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பின் விடுமுறைக்கு அடுத்துவரும் வேலைநாளன்று (அலுவலக நாளில்) குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்