குமரி மாவட்டத்தில் ரூ.4½ கோடி கோவில் நிலம் மீட்பு; அதிகாரிகள் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-10-28 18:56 GMT

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

ரூ.4½ கோடி நிலம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விளவங்கோடு தாலுகா பாகோடு பகுதியில் உள்ளது. ரூ.4 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் 91 சென்ட் புன்செய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் 77 சென்ட் புன்செய் நிலமும் வில்லுக்குறி பகுதியில் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அறநிலையத்துறை தாசில்தார் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பாகோடு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் நடவடிக்கை எடுத்ததன் பேரில் பணியாளர் அய்யப்பன், துறை நில அளவையர்கள் அஜித், ராகேஷ் ஆகியோரால் நிலம் அளந்து மீட்கப்பட்டது.

அறிவிப்பு பலகை

அதைத்தொடர்ந்து அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த நிலம் உடனடியாக பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்