112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம்

அரியலூர் மாவட்டத்தில் 112 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4½ கோடி மானியம் வழங்கப்பட்டது.

Update: 2023-10-25 19:37 GMT

தமிழக அரசு சார்பில் பல்வேறு தொழில்கள் குறித்த கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு முகாம்கள், கடன் வசதியாக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 2023-24-ம் ஆண்டிற்கான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.24.78 லட்சம் மானியத்தொகையும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.49.83 லட்சம் மானியத்தொகையும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ.68.01 லட்சம் மானியத்தொகையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.97.34 லட்சம் மானியத்தொகையும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 22 லட்சத்து 29 ஆயிரம் மானியத்தொகையும் என 112 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோராக விரும்புபவர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04329228555, 8923329925, 8923322926 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்