திருச்சி மாநகராட்சியில் முடிவுற்ற ரூ.4 கோடியில் திட்டப்பணிகள்
திருச்சி மாநகராட்சியில் முடிவுற்ற ரூ.4 கோடியில் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சியில் முடிவுற்ற ரூ.4 கோடியில் திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திட்டப்பணிகள்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டப் பணி, மாநகராட்சி பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தூய்மை இந்தியா திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிவற்ற ரூ.4 கோடியே 21 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது. திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இதில் அரவானூர் மேலப்பாண்டமங்கலம் பெரியமிளகுபாறை, கோரிமேடு, நீர்த் தேக்கத் தொட்டி வளாகப்பகுதியில் ரேஷன் கடைகள், ஆலங்குளம், வாமடம் பகுதியில் நவீன பொதுக்கழிவறை, அரவானூர் முதல் மருதாண்டாகுறிச்சி வரை 32 மின் விளக்குகள், வாமடம், வடவூர் கீழத்தெரு பகுதியில் மின் மோட்டாருடன் கூடிய பி.வி.சி. தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
சமையலறை
செங்குலத்தான் கோவில் தெரு, ரகுமானியபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி, குத்பிஷா நகரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் பொருட்கள் இருப்பு அறைைய அமைச்சர் திறந்து வைத்தார்.
லாவண்யா கார்டன், கொடாப்பு வ.உ.சி. தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொது கழிவறை, பிராட்டியூர் பகுதியில் அமைக்கப்பட்ட சமுதாய கழிவறை, மாநகராட்சி பொது நிதியின் கீழ் உறையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன். எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், பழனியாண்டி., மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.