சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.4¼ கோடி நிதியுதவி

சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.4¼ கோடி நிதியுதவியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தனியார் நிறுவனங்கள் வழங்கின.

Update: 2023-06-09 12:08 GMT

தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான கட்டமைப்பை மேம்படுத்தி, சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையிலும், தேவையான உதவிகளை வழங்கிடும் வகையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரை தலைவராகவும், அந்த துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரை துணைத் தலைவராகவும் கொண்ட 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் இந்த அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் பங்களிப்பாக ரூ.4 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. பொன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ராம்கோ மற்றும் பொன் கெமிக்கல்ஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்