மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் செத்தன

மணமேல்குடி அருகே மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் செத்தன.

Update: 2023-04-21 18:37 GMT

மின்கம்பம் சாய்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தரபாண்டியன், ரவிச்சந்திரன், சிதம்பரம், ராமு. இவர்களுக்கு சொந்தமான 4 மாடுகள் இடையாத்திமங்கலம் வயல் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு மின்கம்பம் எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் சாய்ந்து விழுந்தது.

4 மாடுகள் செத்தன

மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் மாடுகளின் மீது விழுந்தது. இதில் வயலில் நின்றிருந்த 4 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து மாடுகளை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் செத்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்