சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி

சேலம், சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-04-13 10:11 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாத பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்