4 ஆட்டோக்கள் பறிமுதல்

பழனி அருகே அதிக பயணிகளை ஏற்றி சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-09 16:22 GMT

பழனி அருகே கணக்கன்பட்டியில் இருந்து மூட்டைசுவாமி சித்தர் கோவிலுக்கு உரிய அனுமதி இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், விதிகளை மீறி அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி செல்லப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து துறையினருக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து மண்டல போக்குவரத்து இணை ஆணையர் பொன்செந்தில்குமார், கணக்கன்பட்டி பகுதியில் சோதனை நடத்தி விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் ஆயக்குடி போலீசார் கணக்கன்பட்டி பகுதியில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதி, ஒட்டுநர் உரிமம் இன்றியும், அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்ற 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்