திருட்டு வழக்கில் 4 பேர் கைது; 48 வாகனங்கள் மீட்பு

திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 48 வாகனங்கள் மீட்க்கப்பட்டது.

Update: 2023-02-27 19:34 GMT

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் வாகன திருட்டு வழக்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 8 வாகனங்களும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 21 வாகனங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 19 வாகனங்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனங்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை மீட்க சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்