கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது

அரக்கோணம் அருகே கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-28 18:41 GMT

அரக்கோணத்தை அடுத்த நாகவேடு பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலையிலான போலீசார் நேற்று சம்பவ பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகவேடு சுடுகாடு அருகே நின்றிருந்த வாலிபர்கள் 4 பேர் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராமன் (வயது 27), லோகநாதன் (23), விக்னேஷ் (23) மற்றும் லட்சுமணன் (22) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்க முற்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்