மாணவிகளை கேலி கிண்டல் செய்த 4 பேர் கைது

மாணவிகளை கேலி கிண்டல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-09 19:58 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்ற பள்ளி மாணவிகளை சில வாலிபர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதனை கண்டித்த ஒரு மாணவியின் அண்ணனை அந்த வாலிபர்கள் அவதூறாக பேசி தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20), கார்த்திக் (20) மற்றும் 17, 18 வயது நிரம்பிய சிறுவர்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்