பேனர்களை கிழித்த 4 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே பேனர்களை கிழித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பொங்கல் வாழ்த்து பேனர்களை கட்டியிருந்தனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சென்னல்தாபுதுக்குளத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் மகாராஜா (வயது 27), வைத்தியலிங்கம் மகன் வைகுண்டராஜா (28), முருகன் மகன் சுபாஷ் (27), நாட்டார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த தங்கநாடான் மகன் பொன்மாரி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.