கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

வாணியம்பாடியில் கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-21 16:35 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நியூடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 4 பேரை சோதனை செய்த போது அவர்களிடம் கர்நாடகை மாநில மது பாட்டில் மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் வாணியம்பாடியை அடுத்த மராட்டிப்பாளையம், வெள்ளக்குட்டையை சேர்ந்த சதீஷ் (வயது29), பிரபு (27), கிருஷ்ணமூர்த்தி (30), விஜய் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்