மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் நடத்திய சோதனையில் மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் பொட்டக்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 63) என்பவர் வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி(வயது 70). இவர் தனது ஊரிலிருந்து ஜெயங்கொண்டம் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்துவிட்டு, மளிகை பொருட்கள் 4 ரோட்டில் இருந்து சிதம்பரம் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.