அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி காலனி தெரு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற 4 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த எட்டு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் சூரக்குழி ரோட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் மகேஷ்(20), சுந்தரம் மகன் ஆகாஷ்(22), ஆதித்தன் மகன் ராஜகுரு (19), கலியபெருமாள் மகன் சுபாஷ் (23) என்பது தெரிய வந்தது. இதில் மகேஷ், ஆகாஷ், ராஜகுரு ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.