கஞ்சா விற்ற 4 பேர் கைது

விழுப்புரம், திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டாா்.;

Update:2023-05-10 00:15 IST

விழுப்புரம்:

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த குகன் (வயது 20), அரசு (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியில் கஞ்சா விற்றதாக முனுசாமி மகன் செல்வமணி(36), கோட்டையன் மகன் விக்னேஷ்(27) ஆகிய 2 பேரை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்