கஞ்சா விற்ற 4 பேர் கைது
வாசுதேவநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் சுடலை ராஜ் (வயது 42), சுடலை ராஜ் மனைவி மகாலட்சுமி, சதீஷ் மகன் மகேந்திரன் (21), கடையநல்லூர் சேர்ந்த சாலமன் பாரி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.