கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-20 19:58 GMT

ராஜபாளையம்,

தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் மேல வரகுணா ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளி முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேத்தூர் பகுதியை சேர்ந்த செல்வகணபதி (வயது 23), விஜயராஜ் (22), சக்திவேல் (24), வினோத் குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தளவாய்புரம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்