பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 54), முருகன் மகன் ராஜமாணிக்கம் (26), ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (30), கோவிந்தன் (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1000 ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிஓடிய ராஜி என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.