பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது மோட்டார் சைக்கிள் மொபட் பறிமுதல்

Update: 2022-06-26 17:23 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று புக்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலனி சுடுகாட்டு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாடிக்கொண்டிருந்தவர்களை மடக்கினர். இதில் 4 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணையில் அவர்கள் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் வினோத்(வயது 21), சண்முகம் மகன் கதிரவன்(27), வீரன் மகன் குமரேசன்(30), ஆறுமுகம் மகன் மணிகண்டன்(21) என்பதும், தப்பி ஓடியவர்கள் ஜோதிலிங்கம் மகன் சுரேந்தர், அண்ணாமலை மகன் மணிகண்டன் என்பதும், அவர்கள் அனைவரும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் உள்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.600 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்