பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-10 18:10 GMT

ஜெயங்கொண்டம் 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது கீழ குடியிருப்பு பஸ் நிறுத்தத்திற்கு பின்புறம் 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(வயது 53), சந்திரமோகன்(42), ராஜேந்திரன்(35), செல்வராஜ்(41) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள், ரூ.2,320-யையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்