பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் எதிரே உள்ள காலி இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொண்டம்பட்டியை சேர்ந்த பார்த்திபன் (வயது 52), வடசித்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் (41) சபரி, ஜல்லிபட்டியை சேர்ந்த சக்திவேல் (40) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.