பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

கொல்லங்கோடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது;

Update:2023-09-04 00:15 IST

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் மஞ்சத்தோப்பு காலனி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் நாயர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடியதாக கிராத்தூர் விராலிமலை வீட்டை சேர்ந்த ரமேஷ் (வயது42), நித்திரவிளை அருகே தேரிவிளையை சேர்ந்த குமார்(40), உசேன் (41), கிராத்தூர் மருதங்காவிளை வீட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் பிரடி (52) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1810 மற்றும் 52 சீட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்